2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. பின்தங்கிய பிரதேச வைத்தியசாலைகளுக்கு அம்பியூலன்ஸ்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2014 மார்ச் 19 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளின் தேவைகளை கருத்தில்கொண்டு அம்பியூலன்ஸ் வண்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கி திங்கட்கிழமை (17) வைக்கப்பட்டுள்ளன.

மத்திய சுகாதார அமைச்சு மூலம் சுமார் இரண்டு கோடி ரூபா செலவில் இந்த அம்பியூலன்ஸ் வண்டிகள் மற்றும் மருத்துவ பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் வைத்தியசாலைகளுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் கே.முருகானந்தன் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர்கள், வைத்திய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள வாகரை மற்றும் கரடியனாறு மாவட்ட வைத்தியசாலைகளுக்கு இரண்டு அம்பியூலன்ஸ் வண்டிகள் கையளிக்கப்பட்டன.

அத்துடன் ஒட்சிசன் மீள்பிறப்பாக்கி வாழைச்சேனை, களுவாஞ்சிகுடி, ஏறவூர்,காத்தான்குடி வைத்தியசாலைகளுக்கும் ஈ.சி.ஜி இயந்திரம் மற்றும் ஆஸ்மா நோயாளர்களுக்கான நேப்லோகா இயந்திரம் என்பன காத்தான்குடி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மார்பு சிகிச்சை பிரிவு, செங்கலடி, சந்திவெளி, கரடியனாறு ஆகிய வைத்தியசாலைகளுக்கும் வழங்கிவைக்கப்பட்டன.

கடந்த காலத்தில் பல்வேறு தேவைப்பாடுகள் உள்ள வைத்தியசாலைகள் இனங்காணப்பட்டு இவை வழங்கிவைக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் கே.முருகானந்தன் தெரிவித்தார்.
 
சகல உயிர்காப்பு மருத்து வசதிகளைக் கொண்டதாக இரண்டு வைத்தியசாலைகளுக்கு அம்பியூலன்ஸ் வண்டிகளும் வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X