2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யுத்தத்தில் உயிர்நீத்த பொலிஸாரின் நினைவாக அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 19 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


கடந்த யுத்தத்தில் உயிர்நீத்த பொலிஸாரின் நினைவாக மட்டக்களப்பு வித்தியஜோதி சிறுவர் இல்லத்திலுள்ள சிறார்களுக்கு  கற்றல் உபகரணங்களையும் இரவு வேளை உணவையும் மட்டக்களப்பு பொலிஸார் செவ்வாய்க்கிழமை (18) வழங்கினர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணசேகர மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
யுத்தத்தில் உயிர்நீத்த பொலிஸாரின் நினைவாக இவர்களுக்கு அன்பளிப்பு வழங்கப்பட்டதாக மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா தெரிவித்தார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) உயிர்நீத்த படைவீரர்களின் நினைவுதினமாகும்.
 
 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X