2025 மே 07, புதன்கிழமை

உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 மார்ச் 24 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எம்.அனாம்

இனங்களுக்கிடையில் நல்லுறவை வளர்க்கும் நோக்கில் தென்பகுதியில் இருந்து வருகை தந்த பமுனுகம ரொட்டரி கழக உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மாங்கேணி றோமன் கத்தோலிக தமிழ் கலவன் பாடசாலைக்கு ஒரு தொகை பொருட்களை சனிக்கிழமை(22) அன்பளிப்பு செய்தனர்.

மாங்கேணி றோமன் கத்தோலிக தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் ரீ.கணபதிபிள்ளை தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரத்ன, பமுனுகம ரொட்டரிக் கழக தலைவர் நெல்சன் ரொட்ரிகோ, டபள்யூ. குமார் பெரேரா, வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்ன மற்றும் பமுனுகம ரொட்டரிக்கழக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மல்டி மீடியா புரஜெக்டர்,  சங்கீத வாத்தியக் கருவிகள், முதலுதவி பொருட்கள், புத்தகங்கள் என்பன வழங்கப்பட்டதுன் மாங்கேணி கிராமத்தில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த முப்பது குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.


Save

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X