2025 மே 07, புதன்கிழமை

மண்ணை இழந்தால் அனைத்தையும் இழக்க நேரிடும்: அரியநேத்திரன் எம்.பி

Kogilavani   / 2014 மார்ச் 24 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ரவீந்திரன், வடிவேல் சக்திவேல்

'தமிழர்களாகிய  நாங்கள்  எமது அடையாளத்தை  தக்க வைக்க வேண்டுமாக இருந்தால் அடையாளம் உள்ள மண்ணைத் தக்கவைக்க  வேண்டும். மண்ணை  நாங்கள்  இழந்தால் எதிர்காலத்தில்  எல்லாவற்றையும்  இழக்க நேரிடும்' என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின்  மட்டக்களப்பு  மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்  பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாக்கரைப் பகுதியில் அமைந்துள்ள பட்டிப்பளைப் பிரதேச இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (23) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றது.

பிரதேச ஒன்றியத்தின் தலைவர் ஞா.துரையப்பா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுமபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

'மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசம் என்பது எமது சொத்தாகும். இதற்கு ஒரு தனித்துவ மண் வாசனை இருக்கின்றது. அதை கட்டிக்காக்க வேண்டிய தேவை நம் அனைவருக்கும் உள்ளது.

குறிப்பாக எமது படுவான்கரைக்கு பாலம் கிடைத்துள்ளமை ஒரு வரப்பிரசாதமாகும். ஆனாலும் எமக்கு உரித்தான கலாசாரம், வர்த்தகம், நிலம், போன்றவற்றை பேணி காக்க வேண்டியது கட்டாய தேவை.

போராட்டத்தில் இலட்சக்கணக்கான  மக்களை  இழந்த  ஒரெ இனம் என்றால் அது தமிழ் இனம்தான்.  ஏறக்குறைய  மூன்று  இலட்சம் பேரை  நாங்கள்  விடுதலைப் போராட்டத்தில் இழந்து  இருக்கின்றோம். போராட்டத்தில்  இரண்டாவது  இடமாக  பல்லாயிரக்கணக்கானோரை இழந்த  இனமாக  சிங்கள  இனம்  உள்ளது.

நூற்றுக்கணக்கானோரை  இழந்த  இனமாக  முஸ்லிம் சமூகத்தினர் காணப்படுகின்றனர். இதனை தரவுகள்மூலமாக  என்னால்  நிருபிக்க முடியும். முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானோரே  போராட்ட வரலாற்றில்  இறந்துள்ளார்கள்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X