2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சித்திரவதைக்குள்ளானோர் பற்றிய கருத்தரங்கு; எழுவர் குழு இந்தோனேசியா பயணம்

Menaka Mookandi   / 2014 மார்ச் 31 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


இந்தோனேசியாவில் நடைபெறவிருக்கும் சித்திரவதைக்குள்ளானோர் தொடர்பான மனித உரிமைகள் பற்றிய கருத்தரங்கில் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து ஏழு பேர் அடங்கிய குழுவின் இன்று திங்கட்கிழமை (31) அதிகாலை பயணமாகினர்.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து 04ஆம் திகதி வரை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தக் கருத்தரங்கு இடம்பெறவுள்ளதாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவைச் சேர்ந்தவரும் பங்குபற்றுநருமான சட்டத்தரணி அனஸ் ருக்ஷானா பானு தெரிவித்தார்.

ஏசியன் ஜஸ்டிஸ் ரைற்ஸ் (Asian Justice Rights) என்ற ஆசிய நீதி உரிமைகள் அமைப்பே இந்த சித்திரவதைக்குள்ளானோரின் மனித உரிமைகள் பாதுகாப்புப் பற்றிய கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் கருத்தரங்குக்காக சட்டத்துறை சார்ந்தவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் என மொத்தம் ஏழு பேர் இந்தோனேசியாவுக்கு பயணமாகியுள்ளனர். இவர்களில் மூவர் பெண்களாவர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X