2025 மே 07, புதன்கிழமை

இலவச கண் சத்திர சிகிச்சை முகாம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இலவச கண் சத்திர சிகிச்சை முகாமொன்று செவ்வாயக்கிழமை(1) ஆரம்பமானது.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் முயற்சியில் சுகாதார அமைச்சின் அனுமதியுடன் சவூதி அரேபியாவிலுள்ள அல் பசர் சர்வதேச நிறுவனத்தின் உதவியுடன், இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தினால் (ஜம் இய்யத்துஸ்ஸபாப்) இச்சிகிச்சை முகாம் நடத்தப்படுகின்றது.

இவ் முகாமில் பாகிஸ்த்தானிய கண் சத்திர சிகிச்சை வைத்தியர்கள் கலந்து கொண்டு  சிகிச்சையளிக்கவுள்ளனர். 

எதிர்வரும் 5ம் திகதி வரை நடைபெறவுள்ள இம்முகாமில் 600 பேருக்கு கண் சத்திர சிகிச்சை செய்யப்படுமெனவும்,  ஐந்து தினங்களிலும் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்தும் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் கண் சத்திர சிகிச்சை முகாமில் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும், ஜம் இய்யத்துஸ்ஸபாப் நிறுவனத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் சபர் சாலி தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X