2025 மே 07, புதன்கிழமை

கிராமிய மட்ட சிறுவர் உரிமை கண்காணிப்புக் குழுக்கள் நியமனம்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் கிராமிய மட்ட சிறுவர் உரிமை கண்கானிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த சிறுவர் உரிமை கண்காணிப்புக் குழுக்கள் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம உத்தியோகஸ்தர் பிரிவு ரீதியாக அமைக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி முதலாம் குறிச்சி கிராம உத்தியோகஸ்தர் பிரிவுக்கான கிராமிய மட்ட சிறுவர் உரிமை கண்காணிப்புக் குழுவினை அமைக்கும் கூட்டம் புதன்கிழமை (2) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் எஸ்.சக்திநாயகம், கிராம உத்தியோகஸ்தர் வை.எல்.எம்.இப்றாகீம், பிரிவு அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.சுல்பிகார், மீரா ஜும் ஆப் பள்ளிவாயலின் தலைவர் எம்.எஸ்.சுபைர் உட்பட கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதி, பாலர் பாடசாலையின் ஆசிரியை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது இந்த கிராம உத்தியோகஸ்தர் பிரிவுக்கான கிராமிய மட்ட சிறுவர் உரிமை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.

கிராமிய மட்டத்தில் சிறுவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதுடன் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பிரதேச மட்டத்திலும் இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதுடன் கிராமிய மட்டத்தில் தீர்க்க முடியாத சிறுவர்களின் பிரச்சினைகளை பிரதேச மட்டத்திலுள்ள கண்காணிப்புக்குழுவில் தீர்த்து வைக்கப்படும்.

அத்தோடு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 11 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளுக்கு இக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.சக்திநாயகம் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X