2025 மே 08, வியாழக்கிழமை

கிழக்கு பலக்லைக்கு அமைச்சர் எஸ்.பி விஜயம்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், தேவ அச்சுதன்


உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா இன்று (04) வெள்ளிக்கிழமை கிழக்கு பலக்லைக்கழகத்தின் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தர் அழிகியற் கற்கைகள் நிறுவகத்திற்கு விஜயம் செய்து அங்கு நிர்மாணிக்கப்பட்டு வரும் விடுதிக்கட்டிட நிர்மான வேலைகளை பார்வையிட்டார்.

அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா இன்று காலை சுவாமி விபுலானந்தர் அழிகியற் கற்கைகள் நிறுவகத்திற்கு விஜயம் செய்த போது கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா, சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிறேம்குமார் மற்றும் கிழக்கு பலக்லைக்கழக சிரேஷ்ட்ட பதிவாளர் எம்.மகேசன் ஆகியோர் வரவேற்றனர்.

இதையடுத்து இங்கு நிர்மானிக்கப்பட்டு வரும் மாணவர் விடுதிக்கட்டிட நிர்மான வேலைகளை பார்வையிட்டதுடன் நிர்மான வேலைகளின் முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

இதையடுத்து அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா மட்டக்களப்பு பிள்ளையாரடியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கிழக்குப் பல்லைக்கழகத்தின் மருத்து பீட விடுதிக்கட்டிட நிர்மாண வேலகளையும் பார்வையிட்டதுடன் கட்டிட நிர்மாணப் பொறியியலாளர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் கிழக்கு பலக்லைக்கழகத்தின் பிரதான வளாகம் அமைந்துள்ள வந்தாறுமுளைக்குச் சென்று அங்கு நிர்மானிக்கப்பட்டு வரும் கலை கலாசார பீடக்கட்டிட தொகுதி, மற்றும் விடுதிக்கட்டிட தொகுதி நிர்மான வேலைகளை பார்வையிட்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X