2025 மே 08, வியாழக்கிழமை

இயற்கை முறை விவசாயம் தொடர்பில் பயிற்சி

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


வேல்ட்விஷன் நிறுவன த்தின்  வாகரை அபிவிருத்தி திட்டத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கான இயற்கை முறையிலான விவசாயத்தை மேற்கொள்வது தொடர்பான பயிற்சிநெறி மட்டக்களப்பு மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் கடந்த 31ம் திகதி தொடக்கம் நேற்று வியாழக்கிழமை 03ஆம் திகதி வரை நடை பெற்றது.

இதில் வாகரைப் பிரதேசத்தினைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து இப்பயிற்சி நெறியை பெற்றுக்கொண்டனர்.

இப்பயிற்சி நெறியின்போது எதிர் காலத்தில் இப்பிரதேச விசாயிகள் இயற்கை முறையில் விவசாயத்தினை மேற்கொள்வது தொடர்பான பயிற்சிகளும், விளக்கங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X