2025 மே 08, வியாழக்கிழமை

இலவச கண் பரிசோதனை

Kogilavani   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் கண்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான இலவச கண் பரிசோதனை சேவையொன்று வெள்ளிக்கிழமை (4) வாகரை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.

பிரதேசத்தின் முதியோர் சம்மேளனமும் 233 ஆவது படைப்பிரிவினரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இச்சேவைக்கு வாகரை பிரதேசத்திற்;கான உலக தரிசனம் நிறுவனம் அனுசரனை வழங்கியிருந்தது.

இச்சிகிச்சைக்கு 160க்கும் மேற்பட்டோர் சமூகமளித்திருந்தனர். இவர்களுக்கு பொலனறுவை வைத்தியசலையைச் சேர்ந்த கண் வைத்திய நிபுணர் டாக்டர் ஜே.டி.டயஸ் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது கண் பார்வைக் குறைப்பாட்டினால் அதிகம் பாதிக்கப்பட்டோர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஏப்ரல் மாத முடிவில் பொலநறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்படுவார்கள் என்றும், இவர்களுக்கான இலவச மூக்குக் கண்ணாடிகள் பரிசோதனை முடிவின் பிரகாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் எஸ்.ஆர். இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பணிச்சங்கேணி இராணுவப் படைப்பிரிவின் 2 ஆவது கட்டளைத்தளபதி மேஜர் உதய, பொதுமக்கள் தொடர்பு அதிகாரி மேஜர் ஹேரத், மாவட்ட செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகஸ்த்தர்களான ஆ.மதுசூதனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X