2025 மே 08, வியாழக்கிழமை

பெண் சுயதொழிலாளர்களை ஊக்குவித்து தொழிற் சந்தை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

 
'பெண்களின் பொருளாதார முன்னேற்றம் தேசத்துக்கு பலம்' எனும் தொனிப் பொருளில், பெண் சுயதொழில் முயற்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி பொருட்களின் தொழில் சந்தையொன்று மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்;தில்  நேற்று(4) மாலை ஆரம்பமானது.
 
மட்டக்களப்பிலுள்ள நலிவுற்ற பெண் முயற்சியாளர்களை வலுவூட்டும் வகையில் அவர்களை ஊக்குவித்து, அவர்களது உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகள் தொடர்பான வழிகாட்டல்களை வழங்குவதற்காகவும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. நிறுவனம், மற்றும் சேவ் த சில்ரன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் இந்த தொழில் சந்தையினை ஏற்பாடு செய்துள்ளன.
 
வை.எம்.சி.ஏ.நிறுவனத்தின் உப தலைவர்  பயஸ் சசிதரன் ஆனந்தராஜா தலைமையில் நடைபெற்ற ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், சிறுகைத்தொழில் அமைச்சின் தேசிய இணைப்பாளர் செல்வி கே.தங்கேஸ்வரி, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த தொழில் மற்றும் வியாபார சந்தை நாளை ஞாயிற்றுக்கிழமை(6) நிறைவு பெறவுள்ளது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X