2025 மே 08, வியாழக்கிழமை

கிழக்குப் பல்கலைக் கழகம் சர்வதேச புகழ் பெற வேண்டும் :எஸ்.பி.

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கிழக்குப் பல்கலைக் கழகம் சர்வதேச புகழ் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த பல்கலைக்கழகத்திலுள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவரும்; பல்கலைக்கழக நவீன நிர்மாண வேலைகளுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என வெள்ளிக்கிழமை (04) கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு விஜயம் செய்த உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலக கட்டிடத்திற்கு சம்பிரதாயபூர்வமாக நூல்களை மாற்றும் நடவடிக்கையும் நூலகத்தின் வைபவ ரீதியான திறப்பு விழாவுக்கு நாள் பார்த்து பால்காய்ச்சுதலும் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்

 நவீன மயமாக்கப்பட்டு சகல வசதிகளோடும் அமைந்ததாக உள்ள இப் பல்கலைக்கழகம் இம்மாதம் 19 ம் திகதி ஜனாதிபதியால்; திறந்து வைக்கப்படவுள்ளது.

எதிர்வருகின்ற தமிழ் சிங்கள புத்தாண்டை ஒட்டி பல்கலைக் கழகம் புதுப் பொலிவு பெறவிருக்கின்றது. 
ஒரு சாதாரண உயர் கல்விக் கூடம் என்றில்லாமல் சர்வதேச உயர் கல்வி நிலையமாக மாற்றும் பிரயத்தனங்களில் நீங்கள் எல்லோருமாக ஈடுபட்டு உலகப் புகழ் பெற்ற ஒரு உயர் கல்வி நிலையமாக இதனைக் காண்பிக்க வேண்டும.;

வேறு பல்கலைக் கழகத்தில் இடம்பெறும் அபிவிருத்தியோடு கிழக்குப் பல்கலைக் கழக அபிவிருத்திச் செயற்பாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இங்கு இடம்பெறும் அபிவிருத்தி மெச்சத்தக்கதாக உள்ளது. என அவர் கூறினார்.

பூர்த்தியாகியுள்ள நூலகக் கட்டிடத் தொகுதி, கலைப்பீட கட்டிடத் தொகுதி, வணிக முகாமைத்துவப் பிரிவின் கட்டிடத்தொகுதி உடற்பயிற்சிக்கான கட்டிடத் தொகுதிகள் என்பனவற்றையும் அமைச்சர் பார்வையிட்டதோடு பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் அமைச்சர் பார்வையிட்டார்.

கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தலைமையில் இன்று இடம்பெற்ற சம்பிரதாய பூர்வ நிகழ்வுகளில் கலந்து கொண்ட அமைச்சர் அங்கு பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

உயர் கல்வியமைச்சின் மேலதிகச் செயலாளர் ஜயசிங்ஹ, சுவாமி விபுலாநந்தா இசை நடனக் கல்லூரிப் பணிப்பாளர் எம். பிறேமகுமார், பதிவாளர் ரீ. மஹேசன், உதவிப் பதிவாளர் ஸ்ரீமதி பத்திராஜா, இந்து கலாசாரத்துறைத் திணைக்களத் தலைவர் சாந்தி கேசவன், வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் பணிப்பாளர் ஏ. அன்ரூவ் உட்பட பீடாதிபதிகள், பல்கலைக் கழக நிர்வாக அதிகாரிகள் என இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X