2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஆன்மீக ஊர்வலம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
இளைஞர்கள் மத்தியில் ஆன்மீக சிந்தனையை மேம்படுத்தும் நோக்குடன் இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இளம் உள்ளங்களுக்கு ஆத்மீக சிந்தனை எனும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் ஏற்பாடு செய்த இளம் உள்ளங்களுக்கு ஆத்மீக சிந்தனை எனும் விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை (5) மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்திலும் சமய போதனை வைபவத்திலும் பௌத்த, இந்து, கிறிஸ்ததவ, இஸ்லாமிய சமய பிரமுகர்கள் கலந்து கொண்டதுடன் சமய போதனைகளை வழங்கினர்.

இதில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரிகளான ஜி.கலாராணி, ஏ.நிசாந்தி, எம்.எச்.உமர் லெவ்வை உட்பட இளைஞர் சேவைகள் அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.






மட்டக்களப்பு காந்தி பூங்காவிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவை மண்டபம் வரை நடை பெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X