2025 மே 08, வியாழக்கிழமை

ஈரானிய தூதுவருடன் மு.கா பிரதித் தலைவர் சந்திப்பு

Super User   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான ஈரானிய தூதுவர் ஹூசைன் இப்ராஹிம் ஹகானியை கொழும்பில் அமைந்துள்ள அவரது தூதரகத்தில் வைத்து கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் சனிக்கிழமை (5) சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது கடந்த 30 வருட கால யுத்தத்தினாலும், சுனாமி அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வரும் மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையிலான சில திட்டங்களை அமுல்படுத்துவது சம்பந்தமாகவும் அதிகளவான வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான செயற்திட்டங்களை பற்றியும் கிழக்கு மாகாணத்தின் விவசாய, மீன்பிடித் துறைகளின் அபிவிருத்தி சம்பந்தமான விடயங்களையும்; அமைச்சர் ஹாபிஸ் நசீர் கலந்துரையாடினார். அத்துடன் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 'கிழக்கின் முதலீடு' என்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் கிழக்கில் இன்று பல நாடுகள் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளமை பற்றியும் எடுத்துக் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X