2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ஐக்கியத்தை ஏற்படுத்தும் உறவுப்பாலங்களை நிர்மாணித்தமை பாரிய வெற்றி: பசீர்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

யுத்த வெற்றியை விட, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் உறவுப் பாலங்களை நிர்மாணித்தமை பாரிய வெற்றியாகுமென ஊக்குவிப்பு  உற்பத்தித்திறன் விருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

எதிர்வரும் சனிக்கிழமை (19) ஜனாதிபதியால் திறந்துவைக்கப்படவுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பாலத்தை  செவ்வாய்க்கிழமை (15) அமைச்சர் சென்று பார்வையிட்டார். இதன்  பின்னர் கருத்துத்  தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மண்முனைப்பாலம் திறந்துவைக்கப்படுவதன் மூலம் இன ஐக்கியம், சமூக ஒற்றுமை ஏற்படுத்தப்படும். இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை கட்டியெழுப்புவதற்கு இம்மண்முனைப்பாலம் சிறந்ததொரு வழியாக அமையும்.

யுத்தம் முடிந்ததன் பின்னர் வடக்கு, கிழக்கில் ஜனாதிபதியால் பல பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. வடக்கில் பாலங்களும் கிழக்கு மாகாணத்தில் கிண்ணியா பாலம், கல்லடிப்பாலம் பனிச்சங்கேனி பாலம் என்ற வரிசையில் மண்முனைப்பாலமும் ஒன்றாகும்.
கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கமுடியாத இம்மண்முனைப்பாலம்  நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது.

மண்முனைப்பாலம் திறந்துவைக்கப்படுவதனூடாக இப்பிராந்தியத்தில் ஒருவருக்கொருவர் ஐக்கியத்தையும் இன நல்லுறவையும் கட்டியெழுப்ப முடிந்துள்ளது.

இன ஐக்கியத்திற்கான உறவுப்பாலமாக இம்மண்முனைப்பாலம் அமைவதுடன், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு பாலமாகவும் இம்மண்முனைப்பாலம் திகழ்கின்றது' என்றார். 

  Comments - 0

  • M.A.A.Rasheed Wednesday, 16 April 2014 11:55 AM

    ஐக்கியம் ஏற்பட பாலங்கள் அவசியம். கெபினட் மினிஷ்டிக்கு அத்திவாரம் போடுகிறார் பஷிர் நானா. என்ன பொழப்புடா இது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X