2025 மே 12, திங்கட்கிழமை

கொக்கட்டிச்சோலைக்கு தரைவழியாக பஸ் சேவை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பிரதேசத்திற்கு முதன்முதலாக தரைவழியூடான பஸ் சேவைகள் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (20)  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு சாலை முகாமையாளர் கே.மனோகரன் தெரிவித்தார்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ள மண்முனைப்பாலத்தினூடாக தினமும் 02 பஸ்கள் சேவையில் ஈடுபடும்.  இந்நிலையில், கொக்கட்டிச்சோலையிலிருந்து மட்டக்களப்புக்கு முற்பகல்  11.30 மணிக்கும் மட்டக்களப்பு பஸ் நிலையத்திலிருந்து கொக்கட்டிச்சோலைக்கு நண்பகல் 12 மணிக்கும் இப்பஸ்கள் சேவையில் ஈடுபடுமெனவும் அவர் கூறினார்.

இதுவரை காலமும் மண்முனை வாவியூடாக நீர்வழி பாதையூடாக கொக்கட்டிச்சோலை பிரதேசத்திற்கான பஸ் சேவை பல்வேறு சிரமங்களுக்கு இடம்பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X