2025 மே 12, திங்கட்கிழமை

கொக்கட்டிச்சோலையில் முதலாவது திவிநெகும வங்கி திறப்பு

Super User   / 2014 ஏப்ரல் 20 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் முதலாவது (திவிநெகும) வாழ்வெழுச்சி வங்கியை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று ஞாயிற்றுக்கிழமை  மாலை திறந்து வைத்தார்.

30 மில்லியன் செலவில் நிர்மாணிக்ககப்பட்ட இவ்வங்கியினூடாக 4500 சமுர்த்தி பயனாளிகள் நன்மையடைவதாக கொக்கடிச்சோலை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தெரிவித்தார்.

இவ்வங்கி திறப்பு விழா வைபவத்தில் திவிநெகும திணைக்கள பணிப்பாளர் நாயகம் கே.லியனகே மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் எம்.குணரட்னம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த வங்கி சமுர்த்தி வங்கியாக வாடகை கட்டிடத்தில் செயற்பட்டபோது வங்கியில் 60மில்லியன் ரூபாய் சேமிப்பிலுள்ளதாகவும் கடந்த ஆண்டு 1.9மில்லியனை இவ் வங்கி வருமானமாக பெற்றதாகவும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X