2025 மே 12, திங்கட்கிழமை

ஜனாதிபதியின் புத்தாண்டு அன்பளிப்பாக பேரீச்சம் பழங்கள்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 20 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எ.எச்.ஏ. ஹுஸைன்


ஜனாதிபதியின் புத்தாண்டு அன்பளிப்பாக தமிழ் மக்களுக்கு பேரீச்சம் பழங்கள் விநியோகிக்கப்பட்டன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் தேசபந்து டி.எம். சந்திரபால அவர்கள் இன்று(20) இந்த அன்பளிப்புக்களை வழங்கினார்.

ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொடுவாமடு, மயிலவெட்டுவான் கிராமங்களைச் சேர்ந்த 273 குடும்பங்களுக்கு இந்த உயர் ரக இரண்டு கிலோகிராம் பேரீச்சம் பழங்கள் ஜனாதிபதியின் புத்தாண்டு அன்பளிப்பாக விநியோகிக்கப்பட்டன.

சுமார் ஆயிரம் ரூபாய் பெறுமதியான இந்தப் பேரீச்சம் பழங்கள் ஜனாதிபதியினால் தமிழ் சிங்களப் புத்தாண்டையொட்டி வழங்கப்பட்ட அன்பளிப்பாகும் என்று டி.எம். சந்திரபால தெரிவித்தார்.

இன்று மூன்று கிராமங்களிலும் இடம்பெற்ற ,ந்நிகழ்வுகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி மத்திய கிளைச் செயலாளர் ஐ. லயிந்திரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொடுவாமடுக் கிளைத் தலைவர் என். நற்குணம், கொடுவாமடுக் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ரீ. யுகேந்தின் உட்பட  பலர்கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் தேசபந்து டி.எம். சந்திரபால அவர்கள் தமிழ் சிங்களப் புத்தாண்டு தினத்திலோ அல்லது வருடப்பிறப்பிலோ இந்த அன்பளிப்புக்களை தமிழ் மக்களின் கைகளுக்குச் சேர்ப்பித்து விடுமாறு ஜனாதிபதி  அவர்கள் பணித்திருந்தார்.

ஆயினும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக ,ந்த அன்பளிப்புக்கள் உங்கள் கைகளுக்கு வந்து சேர தாமதமாகிவிட்டது. ஆயினும் தமிழ் மக்கள் மீதான நன்மதிப்பை ஜனாதிபதி அன்பளிப்பினூடாகத் தெரிவித்திருக்கின்றார்' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X