2025 மே 12, திங்கட்கிழமை

விபத்தில் மீன் வியாபாரி மரணம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எம்.அனாம்,க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பால்சேனை பகுதியிலுள்ள பாடசாலையொன்றுக்கு அருகில்  வியாழக்கிழமை (24) காலை  இடம்பெற்றுள்ள  வாகன விபத்தில்  கதிரவெளியைச்  சேர்ந்த  மீன் வியாபாரியான  செல்வம் புலேந்திரராஜா (வயது 40) என்பவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி வாழைக்குலைகளை  ஏற்றிக்கொண்டு வந்த கப் ரக  வாகனம், கதிரவெளியிலிருந்து பால்சேனைக்கு  வந்துகொண்டிருந்த மேற்படி நபரின் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளானதாகவும் பொலிஸார் கூறினர். 

04 பிள்ளைகளின் தந்தையான இவர்,  கதிரவெளியிலிருந்து பால்சேனைக்கு வியாபாரத்திற்காக மீன் எடுப்பதற்கு வந்துகொண்டிருந்தபோதே விபத்திற்குள்ளானார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் வாகரை பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X