2025 மே 12, திங்கட்கிழமை

ஆரையம்பதி வைத்தியசாலையை தள வைத்தியசாலையாக்க ஜனாதிபதி உறுதி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மிகப் பழமைவாய்ந்த ஆரையம்பதி வைத்தியசாலையினை தள வைத்தியசாலையாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதி அளித்துள்ளதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

அண்மையில் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆரையம்பதி வைத்திய அதிகாரி  திருமதி மோகனாவதி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை மனுவினை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு தலைவருமான பூ.பிரசாந்தன் கையளித்து சுட்டிக்காட்டியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் தொன்மையான ஆரையம்பதி வைத்தியசாலை மட்டக்களப்பு கல்லடிப் பாலம் தொடக்கம் மட்டக்களப்பு செட்டிபாளையம் வரைக்கும், மற்றும் பட்டிப்பளை பிரதேசம் உள்ளிட்ட சுமார் 4 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் உள்ள மக்களின் வைத்திய தேவையினை பூர்த்தி செய்து வருகின்றது யுத்தம், சுனாமி அனர்த்த காலங்களில் குறைந்த அளவான வளத்தின கொண்டு சேவை புரிந்து வந்த இவ் வைத்தியசாலை இன்றும் வீதி விபத்துக்கள் உள்ளிட்ட  அனைத்து அவசர வைத்திய சேவைகளையும்  மேற்கொண்டுவருகின்ற போதும் இன்றுவரை அரசியல் சூழ்நிலை காரணமாக தளவைத்திய சாலை அந்தஸ்த்து வழங்கப்படாது உள்ளது.

 தள வைத்தியசாலை எனும் நாமம் இல்லாது தரம் உயர்த்ப்படாத போதும் தள வைத்தியசாலைக்கு ஈடான வைத்திய சேவையினை வழங்கிவரும் இவ் வைத்தியசாலையினை தள வைத்தியசாலையாக தரம் உயர்த்த வேண்டும் என பல முறை கோரப்பட்டு வந்ததமை குறிப்பிடத்தக்கது

மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தனால் கிழக்கு மகாண அமைச்சரவை அனுமதிக்காக இவ்விடயம் முன் வைக்கப்பட்டுள்ளது



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X