2025 மே 12, திங்கட்கிழமை

படுவான்கரையில் காலபோக வேளாண்மை பாதிப்பு

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாக்கரை பிரதேசத்தின் காலபோக வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது.

வயல் கண்டத்தினைச் சூழ்ந்திருந்த சிறிய குளங்களில் இருந்த நீரினை நம்பியே விவசாயிகள் தமது ஜீவனோபாயத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இருந்த போதிலும் இவ்வேளாண்மைச் செய்கைகளுக்கு அங்குள்ள சிறிய குளங்களில் தேங்கியிருந்த நீர் வற்றியுள்ளதனால் நெற்பயிர்கள் நீரின்றி சாவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஓரளவு வயல் பகுதியினை அண்டியுள்ள சிறிய குளங்களிலிருந்த நீரினை வேளாண்மைகளுக்கு பாய்ச்சிள்ள போதிலும் தற்போது படுவான்கரைப் பகுதியின் பெரியபோரதீவு, கோவில்போரதீவு, பழுகாமம், வெல்லாவெளி, ஆகிய வயற் பிரதேசங்களில் சுமார் 50இற்கு மேற்பட்ட ஏக்கர் வேளாண்மை வயல்கள் இவ்வாறு நீரின்றி இறந்து போகும் நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X