2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மட்டு. ஒல்லாந்தர் கோட்டையை தேசிய மரபுரிமை கலாசார நிலையமாக மாற்ற ஏற்பாடு

Suganthini Ratnam   / 2014 மே 11 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்,ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டச் செயலக வளாகம் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டைப் பிரதேசத்தை தேசிய மரபுரிமை கலாசார நிலையமாக மாற்றும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் ஆராயும் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் சனிக்கிழமை (10) நடைபெற்றது.

அமெரிக்க நிதியுதவித் திட்டத்தின்; கீழ் முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டத்தின் முன்னேற்றங்கள் பற்றி இக்கூட்டத்தில் ஆராயப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அரசாங்க  அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ், அமெரிக்கத் தூதரகத்தின் கரையோரப் பாதுகாப்பு அதிகாரி டவண் சுணி (னுயறன் ளரனி) , பேராசிரியர் பாலித விஜயரத்ன, மாவட்டச் செயலக பொறியியலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X