2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

இமாம்கள் மற்றும் கதீப்மார்களின் திறன் விருத்தி செயலமர்வு

Super User   / 2014 மே 11 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


இமாம்கள் மற்றும் கதீப்மார்களின் திறன் விருத்தியை மேம்படுத்தும் பொருட்டு இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் (ஜம் இய்யத்துஸ்ஸபாப்) பயிற்சி செயலமர்வுகளை நடாத்தி வருகின்றது.
 
இந்த திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கான இரண்டு நாள் செயலமர்வொன்று மட்டக்களப்பு சத்துருக்கொண்டானீலுள்ள சர்வோதய பயிற்சி நிலையத்தில் சனிக்கிழமை(10) ஆரம்பமானது.
 
காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில்  ஆரம்பமான இந்த செயலமர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (11) நிறைவு பெறவுள்ளது.
 
இதன் ஆரம்ப வைபவத்தில் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவின் ஆயட்கால தலைவர் மௌலவி ஐ.எல்.எம்.முஸ்தபாஈ செயலாளர் அஸ்ஸெய்க் ஏ.எம்.ஜிப்ரி மதனீ, மௌலவி ஏ.ஜ.எம்.அமீன், இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் சபர் சாலி, பயிற்றுனர் இஸ்மாயில் ஏ அஸீஸ், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவின் நிருவாக செயலாளர் மௌலவி எம்.அமானி, சர்வோதயத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் இ.எல்.ஏ.கரீம் உட்பட முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.
 
இமாம்கள் மற்றும் கதீப்மார் ஜும் ஆ பிரசங்கங்களை நிகழ்த்துவத்றகு தேவையான இமாம்கள் மற்றும் கதீப்மார்களின் திறன் விருத்தியை மேம்படுத்தும் பொருட்டு இவர்களுக்கு இச் செயலமர்வு நடைபெறுகின்றது.

இதில் 28 இமாம்கள் மற்றும் கதீப்மார் கலந்து கொண்டுள்ளனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X