2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

இறங்குதுறையில் அத்துமீறுவது இடைநிறுத்தம்

Super User   / 2014 மே 11 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்,எஸ்.ரவீந்திரன்


மட்டக்களப்பு மாவட்டதின் மண்முனைப்பற்று பிரதேசத்தின் ஆரையம்பதி கிழக்கு கடற்கரையின் இயற்கை இறங்குதுறை மற்றும் கடல் வலய இயற்கைத் தாவரங்கள் அழிப்பு மற்றும் கடல் வார்ப்பு, மணல் அகழ்வுகளுக்கு இடைக்காலதடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
 
கடந்த இரு வார காலமாக ஆரையம்பதி கிழக்குக் கடற்கரை பகுதியில் இயற்கையாக அமையப்பெற்ற இறங்குதுறை கடல்வலய தாளம் பற்றைகள் மற்றும் இயற்கை மணல் வார்ப்புக்கள் என்பவற்றினை சில தனி நபர்கள் அரச சட்டதிட்டங்களுக்கு முரணாக அத்து மீறி ஆக்கிரமிக்க முற்பட்டனர் 
 
இது 1981ஆம் ஆண்டின் 57ஆம் இலக்க மற்றும் 2011ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க  கரையோரம் பேணல் திருத்த சட்டங்களுக்கும், அனர்த்த முகாமைத்துவ சுற்று நிருபங்களுக்கும் முரணான செயற்பாடு, என சுட்டிக்காட்டிய முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், ஆரையம்பதி நரசிம்மர் ஆலய பரிபாலன சபையினர், நரசிம்மர் ஆழ்கடல் மீனவர் சங்கத்தினர், போன்றோர் குறித்த விடயம் தொடர்பாக
 
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண  முன்னாள் முதல்வரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், கடத்தொழில் அமைச்சு, சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர், மண்முனைப்பற்று பிரதேசத்தின் பிரதேச செயலாளர் பி.வாசுதேவன், அரச அதிபர்  திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம், ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
 
இதனையடுத்து பொலிஸாரின் துணையுடன் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பி.வாசுதேவன் ஆகியோருக்கும் அரசதிணைக்கள அதிகாரிகளும் மேற்கொண்ட துரித  நடவடிக்கையின் காரணமாக இக்கடற்கரைப் பிரதேசத்தின் மணல் அகழ்வு கடல் வலய வேலைத் திட்டங்களை இடைநிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அரச சட்டதிட்டங்களை மீறி வேலைகளை மேற்கொண்ட நபருக்கு எதிராக  காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் நீதி மண்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பூ.பிரசாந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஒரு வருடகாலமாக ஆரையம்பதி பிரதேசத்தின் அரசகாணிகள், பொது மயாணம், கடற்கரைக்காணிகள், மீதான அத்து மீறல்கள், தொடர்பாகவும் குடியேற்றங்கள், தொடர்பாகவும் பல பொலிஸ் முறைப்பாடுகளையும் நிதீமன்ற வழக்குகளையும் ஆரையம்பதி பிரதேச செயலகம் தொடுத்துள்ளதுடன், பல முறை மேலும் அப்பிரதேச பொது மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X