2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மகளிர் அபிவிருத்தி நிலைய கண்காட்சியும் சான்றிதழ் வழங்கலும்

Super User   / 2014 மே 13 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன் மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தினால் செயற்படுத்தப்படும் மண்முனை வடக்கு மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஒரு வருட மகளிர் அபிவிருத்தி டிப்ளோமா பயிற்சியினை பூர்த்தி செய்த மாணவர்களின் உற்பத்திக் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று (13) இடம்பெற்றது.

கல்லடி முகத்துவாரத்தில் உள்ள மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் போதனாசிரியர் திருமதி நந்தினி அன்ரனிதாஸின் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி மாலதி மகேஸ்வரன் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வெ.தவராஜா கலந்துகொண்டதுடன் கௌரவ விருந்தினராக மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மோகன் பிரேம்குமார் கலந்துகொண்டார்.

இதன் போது கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் பயிற்சியினைப் பூர்த்தி செய்தவர்களின் உற்பத்தி பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X