2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர்களின் விபரங்களடங்கிய விபரக் கொத்தை வெளியிட நடவடிக்கை

Kogilavani   / 2014 மே 15 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர்களின் விபரங்களடிங்கிய விபரக் கொத்து ஒன்று மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் வெளியிடப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் மாதாந்த கூட்டம்; ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் புதன்கிழமை(14) அதன் தலைவர் ரி.எல்.ஜௌபர்கான் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதில் சம்மேளனத்தின் செயலாளர் எம்.ரி.எம்.பாரிஸ், உப தலைவர் ஏ.ஜி.எம்.நாசர், உப செயலாளர் எம்.ஏ.சி.எம்.ஜெலீஸ் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர்களின் விபரங்களடிங்கிய விபரக் கொத்து ஒன்று வெளியிடுவதுடன் அதற்கான விபரங்களை திரட்டுவது எனவும் இதற்காக படிவமொன்று தயாரித்து அனுப்பப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளர் எம்.ரி..எம்.பாரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு இலவச போக்குவரத்துக்கான பஸ், இலவச பாஸ் பெறுவதற்கான நடவடிக்கையினை மேற் கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X