2025 மே 02, வெள்ளிக்கிழமை

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு தையல் மெஷின்கள்

Kogilavani   / 2014 மே 15 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மிச்நகர் கிராமத்திலும் செங்கலடிப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கொடுவாமடுக் கிராமத்திலும் வறுமை நிலையில் பெண்கள் தலைமை தாங்கும்  4 குடும்பங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் 4 தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் எயிட் நிறுவன மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம். அஸ்மி தலைமையில் புதன்கிழமை(14) இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா,  கொடுவாமடு கிராம சேவையாளர் எஸ்.கோகுலராஜ், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரெட்ணம் சுதாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் வாழ்வாதார மீள் எழுச்சி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த உதவிகள் வழங்கப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் வாழ்வாதார உத்தியோகத்தர் ஏ.ஜி.எம்.பஹி தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X