2025 மே 02, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் ஆட்டோ சாரதி கைது

Suganthini Ratnam   / 2014 மே 16 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


விற்பனைக்காக 02 கிலோ கிராம்  கஞ்சாவை முச்சக்கரவண்டியில் கொண்டுவந்ததாகக் கூறப்படும் அம்முச்சக்கரவண்டிச் சாரதியை வாழைச்சேனை பொலிஸ் பிரிவில்  நேற்று வியாழக்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தியாவட்டுவான் பிரதேசத்திலிருந்து வாழைச்சேனை பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்ட 04 பொதிகளில் அடைக்கப்பட்ட  கஞ்சாவையும் முச்சக்கரவண்டியையும்  கைப்பற்றியதாகவும் வாழைச்சேனை பொலிஸார் கூறினர்.

இருப்பினும், இம்முச்சக்கரவண்டியில் கஞ்சாவை கொண்டுவந்த ஏனைய சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளனர்.  இவர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் தங்களுக்கு கிடைத்த  தகவலையடுத்து இச்சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் முச்சக்கரவண்டியுடன் சந்தேக நபரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை பொலிஸார்  ஆஜர்படுத்தவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X