2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பல்லூடக திரை பெருக்கி அன்பளிப்பு

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு புதுக்குடியிருடிப்பில் அமைந்துள்ள விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரிக்கு சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த விஜயகுமாரன் மற்றும் துரைரெட்ணம் ஆகியோர்; கல்லூரி நடவடிக்கைகளை வெள்ளிக் கிழமை (16) நேரில் பார்த்து அறிந்து கொண்டதோடு மாணவர்களுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.

அத்தோடு கல்லூரிக்கு மிக அவசியமாக ஒரு பல்லூடக திரைபெருக்கி  (Multimedia Projector)  தேவையாகவுள்ளதாக விஜயகுமாரிடம் விடுத்த வேண்டு கோளுக்கு இணங்க,  அவர்; முன்வந்து உடனடியாக  கொள்வனவு செய்து கொடுத்துள்ளனர்.

தொடர்ந்தும் இக்கல்லூரிக்கு வேண்டிய தன்னால் இயன்ற உதவிகளை வழங்கவிருப்பதாகவும் அவர் இதன்போது கல்லூரி நிர்வாகத்தினரிடம், உறுதியழித்துள்ளார்.

இவ்வாறான உள்ளங்களின் உதவியுடன் இக்கல்லூரியினை ஒருசிறந்த தொழில் பயிற்சி வழங்கக்கூடிய இடமாக உயர்த்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் அடிப்படைக் கணினி அறிவினை வழங்கிவருவதோடு, தொழில் வாய்ப்பினை பெறக்கூடிய பயிற்சி நெறிகளையும் எதிர் காலத்தில் வழங்கவிருப்பதாகவும் இக்கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X