2025 மே 02, வெள்ளிக்கிழமை

மக்களை வலுவூட்டும் நடமாடும் சேவை

Kanagaraj   / 2014 மே 20 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


கிராமம் கிராமமாக வீடு வீடாக பொருளாதார அமைச்சின் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் - 2014ற்கு அமைய மக்களை வலுவூட்டும் நடமாடும் சேவை  இன்று(20) செவ்வாய்க்கிழமை மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை)  பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் பண்டாரியாவெளி கிராமத்தில் நடைபெற்றது.

இதன்போது பண்டாரியாவெளி மற்றும் கடுக்காமுனை பிரதேச மக்களின் பிரச்சினைகளை இனங்காணப்பட்டு அம்மக்களுக்குரிய சேவைகள் வழங்கப்பட்டன.

பதிவாளர் நாயக திணைக்கள சேவைகள், ஆட்பதிவுத் திணைக்களம், பதிவு மற்றும் உறுதிப்படுத்தல் சேவைகள்,  காணி, வீடமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள், சமூகசேவைகள், திவிநெகும வாழ்வாதார நடவடிக்கைகள், சுகாதார சேவைகள் என்பன வழங்கப்பட்டன.

மேலும் பிரதேச சபை சேவைகள், பொதுத் தேவை நடவடிக்கைகள், கல்வி கலாசார மற்றும் தொழிற் பயிற்சி சேவைகள், நீப்பாசன மற்றும் சுற்றாடல்சார் சேவைகள், பொலிஸ் சேவைகள், மற்றும் மாட்ட செயலகம் பிரதேச செயலகங்களின் சேவைகள் என்பன இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .