2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கஞ்சாவுடன் வயோதிப மாது கைது

Menaka Mookandi   / 2014 மே 21 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர், புன்னக்குடா வீதியில் 30 கட்டு கஞ்சாவுடன் 60 வயது வயோதிபப் பெண் ஒருவரை மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றப்புலன் விசாரணைப் பிரிவினர், செவ்வாய்க்கிழமை (20) கைது செய்துள்ளனர்.

ஏறாவூர் புன்னக்குடா வீதியில் உள்ள ஜவ்பர் ஸகர்வன் (60 வயது) என்ற வயோதிபப் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றப்புலன் விசாரணைப் பிரிவு உதவிப் பொலிஸ் பரிசோதகர் கே.அமில தலைமையிலான ஏ.ரி.எம்.சுபியான் (61217) தமிழ்ச்செல்வன் (67995), மஜீத் (80044), பிரியங்கர (66426) ஆகிய பொலிஸ் குழுவினரே, குறித்த பெண்ணைக் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட வயோதிபப் பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X