2025 மே 01, வியாழக்கிழமை

பெண்களின் அரசியல் பிரவேசம் தொடர்பிலான கலந்துரையாடல்

Kogilavani   / 2014 மே 28 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


பெண்களின் அரசியல் பிரவேசம் மற்றும் ஜனநாயகம், பெண்கள் வேட்பாளர்களாக தேர்தலில் பங்கு கொள்ளுதல் பற்றிய திறந்த கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றது.

இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம், பெண்கள் மற்றும் ஊடக கட்டமைப்பு மற்றம் மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் ஆகியன இணைந்து இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது, 'என்னைப் பெண்ணென்று நினையாதே' (ஒரு தேர்தல் கதை) எனும் திரைப்படமொன்று திரையிடப்பட்டது. இதன்பின்பே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இத்திரைப்படம் 2011ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிண்ணியா பிரதேசத்தில் முதல் தடவையாக போட்டியிட்ட ஐனுல் வீவி எனும் பெண் வேட்பாளரின் தேர்தல் கதையை வைத்து இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம், பெண்கள் மற்றும் ஊடக கட்டமைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில், கிழக்கு பலக்லைக்கழகத்தின் நுண்கலைத்துறை முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சி.மௌனகுரு, மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஆலோசகர் பேராசிரியை திருமதி சித்திரலேகா மௌனகுரு, இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம், பெண்கள் மற்றும் ஊடக கட்டமைப்பு என்பவற்றின் முக்கியஸ்த்தர்களான திருமதி ஜுலனி கெடிக்கா,  திருமதி வேலாயுதன் ஜெயச்சந்திரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பெண்கள் அரசியலில் பங்கு கொள்வது மற்றும் ஜனநாயகம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .