2025 மே 01, வியாழக்கிழமை

அமெரிக்க குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளது: வி.கமலாதாஸ்

Kogilavani   / 2014 மே 30 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மிக விரைவில் அமெரிக்காவிலிருந்து முக்கியஸ்த்தர்கள் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளமை தொடர்பில் அமெரிக்க தூதுவராலயத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அரசியல் அதிகாரி பெரேசா தெரச்சி வியாழக்கிழமை(30) தெரிவித்ததாக மட்டக்களப்பு பிரஜைகள் சபை தலைவர் வி.கமலதாஸ் மேலும் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அரசியல் அதிகாரி பெரேசா தெரச்சி வியாழக்கிழமை(30) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்செய்து மாவட்டத்திலுள்ள முக்கிஸ்த்தர்கள் பலரை  சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இச்சந்திப்பு தொடர்பில் கமலாதாஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கைக்கு வரவுள்ள அமெரிக்க குழுவினர்  சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளமை தொடர்பில் அரசியல் அதிகாரி குறிப்பிட்டார்.  

தற்போதுள்ள சூழ்நிலையில் மத முரண்பாடுகள் தொடர்பில் மக்களின் பார்வை பற்றி இவர் கேட்டறிந்து கொண்டார்.

காணி உரித்து தொடர்பாக ஏற்படுகின்ற முறண்பாடுகள்  தீர்க்கமுடியாதுள்ளதால் அதனால் ஏற்படும் முறண்பாடுகள் தொடர்பாகவும், இது தொடர்பில் மக்களிடமுள்ள அதிருப்தியான மன நிலை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் நலன் மற்றும் அவர்கள் புறக்கணிக்கப்படுவது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் கலந்துரையாடினார்' என கமலதாஸ் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .