2025 மே 01, வியாழக்கிழமை

இரத்த தான நிகழ்வு

Kanagaraj   / 2014 மே 31 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.ரீ.எம்.பாரிஸ்


மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வழிகாட்டலில் 'சமூக சேவையின்பால் இளைஞர்களை அழைத்தல்' எனும் தொனிப்பொருளுகமைவாக வாகரை இளைஞர் கழக பிரதேச சம்மேளனம், இணைந்து நடத்திய இரத்ததான நிகழ்வு வெள்ளிக்கிழமை(30) வாகரை பிரதேச செயலக கட்டடத்தில் இடம்பெற்றது.

வாகரை இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின் தலைவர் ரீ.சத்தியநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு வாகரை பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம், இராணுவத்தினர் மற்றும் வேல்ட் விஷன் லங்கா நிறுவனம் ஆகியனவும் இணைந்து நடத்தியிருந்தமை விஷேட அம்சமாகும்.

இதன்போது, மட்டு. பிராந்திய தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என் நைறூஸ் உரையாற்றுகையில்..

30 வருட கால யுத்த பிடியிலும்  புலிகளின் கட்டுபாட்டின் கீழ் இருந்து பிழையான வழி நடத்தலில் அழைத்து செல்லப்பட்ட இளைஞர்களை ஒருங்கினைத்து, அவர்களை மனித நேய நடவடிக்கையின் பால் சிந்திக்க செய்து பண்படுத்தப்பட்ட இளைஞர் சமூகத்தை உருவாக்கி  தேசத்தின் அபிவிருத்தியில் பங்களிப்பு செய்யும் வேலைத்திட்டங்கள் பல மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இவ்வாறான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக  அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், வாகரை பிரதேச செயலாளர் செல்வி ஆர். ராகுல நாயகி, மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ், மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்திய பொறுப்பதிகாரி டொக்டர் கே.விவேக, வாகரை பனிச்சங்கேனி 2ஆம் நிலை இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ரஜ்ஜித்குன சேகர, லேப்டினன் கே.எஸ்.சந்தன திலக உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

இதன்போது, நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் இரத்தம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .