2025 மே 01, வியாழக்கிழமை

நடமாடும் விழிப்புணர்வும் போட்டி நிகழ்வும்

Kanagaraj   / 2014 மே 31 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வறுமை நிலை அதிகமாகக் காணப்படுவதனால் பாடசாலை இடைவிலகலும் அதிகரித்துக் காணப்படுகின்றது. 

சிறுவர்களின் உடல், உள விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் 'மகிழ்ச்சியான குடும்பம் ஆரோக்கியமான சமூகம்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் கழகம், மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் (ymca) அனுசரணையுடன் பிரதேச செயலக மட்டத்தில் நடாத்தி வரும் சிறுவர் அபிவிருத்தியை மையமாகக் கொண்ட நடமாடும் விழிப்புணர்வும், சிறுவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்வு, வெள்ளிக்கிழமை (30) கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட திகிலிவெட்டை மட்.கல்.திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில்  இடம்பெற்றது இதன்போதே, கோறளைப் பற்று தெற்கு பிரதேச  செயலாளர், கோ. தனபாலசுந்தரம் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

இந்நிகழ்வினை தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்குகையில்,

கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் காணப்படும் மாணவர்களின் இடைவிலகல் பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு எமது பிரதேச செயலகத்தினால், பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு வருடங்களில் இப்பிரச்சினையை முற்றாக நிவர்த்திக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில்,  சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும், சிறுவர்களுக்கான ஆளுமை விருத்திப் பயிற்சிகளும் இடம்பெற்றன. இதன்போது வறுமை காரணமாக பாடசாலைக் கல்வியை இடையில் விட்டு விடும் நிலையில் உள்ள 13 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.

மாலை வேளையில், சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன், சிறுவர் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான மாவட்ட இணைப்பாளர் வீ.குகதாசன், சிறுவர் அபிவிருத்தி மேம்பாட்டு உதவியாளர் எம்.டபிள்யு.கே.றுசைட் மற்றும் மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் (ymca) பிரதிநிதிகளான திருமதி.ஐஸ்வர்யா தேவி, எஸ்.குகதாசன்,  கே.அன்பு உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .