2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 மே 31 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஐம்பது (50) குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வும் பிரதேச செயலகத்தில் திவிநெகும திட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மாம்பழ அறுவடை நிகழ்வும் வெள்ளிக்கிழமை(30) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் தியாவட்டுவான் கிராம சேவகர் பிரிவில் மிக நீண்டகாலமாக குடியிருந்து காணி அனுமதிப்பத்திரம் பெறாத ஐம்பது (50) குடும்பங்களுக்கு காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக  கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர் ஜி.ரவிராஜன் தெரிவித்தார்.

இதன்போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ், கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர் ஜி.ரவிராஜன், மட்டக்களப்பு மாவட்டச் செயலக தலைமைக் காணி உத்தியோகத்தர் கே.ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X