2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வேள்ட் விஷனின் போஷாக்கு கருத்தரங்கு

Kanagaraj   / 2014 மே 31 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளைப் பிராந்திய வேள்ட் விஷன் அரச சார்பற்ற அமைப்பின் அபிவிருத்தி திட்டத்தின் ஏற்பாட்டில், பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு தொடர்பான கருத்தரங்கு வெள்ளிக்கிழமை(30) நடைபெற்றது.

மட். அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும், மட். அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியாலயத்திலும் இந்நிகழ்வு இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் கல்விப் பொதுத்தர சாதாரண தரத்திலும், உயர்தரத்திலும் கல்வி பயிலுகின்ற மணவர்கள் பங்குபற்றியிருந்தனர். 

வேள்ட் விஷன் அமைப்பின் அபிவிருத்திகள் தொடர்பான திட்ட இணைப்பாளர் என்.சபேசனின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இக்கருத்தரங்கில், அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் 45 மாணவர்களும், அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியாலயத்தில் 54 மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, மாணவர்களது பாடசாலைக்கல்விக் காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும், போஷாக்கான உணவு பழக்கங்கள், போஷாக்கான உணவு வகையின் செயற்பாடுகள், உணவின் பாதுகாப்பு, அதன் அளவு கோல்கள், தசை வளர்ச்சிக்குரிய ஊட்டச்சத்துக்கள், என்பன சம்பந்தமாகவும்,  விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாக வேள்ட் விஷன் அமைப்பின் திட்ட இணைப்பாளர் என்.சபேசன் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X