2025 மே 01, வியாழக்கிழமை

சட்டவிரோத ஆயுதங்களுடன் முன்னாள் போராளி கைது

Super User   / 2014 ஜூன் 01 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்ட விரோத ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் இன்று(01) தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்தே சந்தேக நபரான கண்ணமுத்து யோகரா (48) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் விடுதலை புலிகள் அமைப்பில் இருக்கும் போது வீரமணி என்று அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனேரி குளத்து மடுவவைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் யானை வழங்கி எனும் வயல் பிரதேசத்தில், உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் இன்னும் இருப்பதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளதாகவும் அது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் இவருக்கு எதிராக வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தின் மூலம் பகிரங்க பிடியானை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேடப்பட்ட நிலையில் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையிலயே இன்று பிற்பகல் வாழைச்சேனை பொலிஸ் நிலைய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .