2025 மே 01, வியாழக்கிழமை

'சிறுவர்களின்; உரிமைகளை பாதுகாக்க முன்வரவேண்டும்'

Kogilavani   / 2014 ஜூன் 03 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.ருத்திரன்


'சிறுவர் உரிமை பற்றிய விடயங்கள் தொடர்பாக எமக்கு எதுவும் தெரியாது என்று பெற்றோர்களோ அவர்கள் சார்ந்த சமூகத்தினரோ பொயச்சாட்டுக்கள்  கூறி தப்பித்துக்கொள்ள முடியாது.  இதனை அறியாதவர்கள் இனிமேலாவது அறிந்து சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்க முன்வரவேண்டும்' என்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ரி.தினேஸ் தெரிவித்தார்.

மகிழ்ச்சியான குடும்பம் ஆரோக்கியமான சமூகம் எனும் தொனிப்பொருளில் புதுக்குடியிருப்பு கலைவானி கலாமன்றத்தில் திங்கட்கிழமை (2) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'சிறுவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் அவர்கள் சார்ந்த குடும்ப அங்கத்தவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.   தாய்மார்கள்  பிள்ளைகளை விட்டு வெளிநாடு செல்லல், தந்தையர்கள் போதைக்கு அடிமையாதல் இதனால் தொடர்ந்து ஏற்படும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்றவை தவிர்க்கப்படவேண்டும். பெற்றோர்கள் தொலைக்காட்சி  தொடர்களை பார்ப்பதில் கவனம் செலுத்துவதை குறைத்து பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பது அவசியம்.

சிறுவர்கள் ஆரோக்கியமாகவும் புத்திசாலிகளாகவும் திகழவேண்டுமென்றால் உணவு மாத்திரமல்ல பெற்றோர்களது அன்பும் அவசியமானது'   என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .