2025 மே 01, வியாழக்கிழமை

மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வாகன பவனி நிறைவு

Kogilavani   / 2014 ஜூன் 03 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்புமெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200வது ஆண்டு நிறைவையொட்டி கல்லூரியின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டி நடைபெற்று வந்த வாகன பவனி  திங்கட்கிழமை(2) மாலையுடன் நிறைவு பெற்றது.

கடந்த வியாழக்கிழமை (29) ஆரம்பமான இந்த வாகன பவனி திருகோணமலை மாவட்டம் மற்றும் அம்பாறை மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் போன்ற மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வாகன பவனி திங்கட்கிழமை மாலை காத்தான்டிக்கு வந்த போது காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்னாள் வைத்து   பாடசாலையின் காத்தான்குடி பழைய மாணவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் அதிபர்களான எம்.ஏ.எசி.பதுர்தீன், மௌலவி ஏ.சி.எம்.றிபாய், முன்னாள் அதிபர் எம்.உதுமான்சாகிபு,  மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் உட்பட பலர்;கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .