2025 மே 01, வியாழக்கிழமை

விபத்தில் மாணவி மரணம்

Kanagaraj   / 2014 ஜூன் 03 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ருத்திரன்,எம்.எம்.அனாம்

மட்டக்களப்பு கதிரவெளியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 7 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். 

புத்தள பிரதேசத்தில்; இருந்து வெலிஓயா திருகோணமலை நோக்கி; இராணுவ உயர் அதிகாரிகள் பயணம் செய்த வான் பாடசாலை விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவியை மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

கதிரவெளி கணிஸ்ட வித்தியாலயத்தில் 3ஆம் ஆண்டில் கல்வி பயிலும் ம.பொபித்தா வயது(7) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டள்ளது.இது தொடர்பான விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவித்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .