2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக நிதிதிரட்ட நடவடிக்கை

Kogilavani   / 2014 ஜூன் 17 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

அளுத்கம மற்றும் தர்கா நகர் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவுவதற்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

இதற்காக காத்தான்குடியில் எதிர்வரும் சனிக்கிழமை வீடு,வீடாக சென்று நிதி திரட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சம்மேளன மண்டபத்தில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற கூட்டத்தின்போது இவ்விடயம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அளுத்கம மற்றும் தர்கா நகர் சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இக் கூட்டத்தில் சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X