2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வீட்டின் மீது கழிவு எண்ணெய் வீச்சு

Kogilavani   / 2014 ஜூன் 19 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன், ஜவ்பர்கான்


மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர் நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல் ஹாஜியரின் வீட்டின் மீது கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடி 4ஆம் குறிச்சி மின்சார நிலைய ஒழுங்கையிலுள்ள வீடே இவ்வாறு தாக்கதலுக்குள்ளாகியுள்ளது.

அளுத்கம சம்பவத்தை கண்டித்து காத்தான்குடியில் வியாழக்கிழமை(19) அனுஷ்டிக்கப்படவிருந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படமாட்டாது எனவும் வர்த்தகர்கள் வழமைப்போன்று கடைகளை திறக்கலாமென இவர், தனது தலைமையிலான வர்த்தக அமைப்பின் அங்கத்தவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த தகவல் அனுப்பபட்டு சில நிமிடங்களிலேயே இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0

  • irfan Thursday, 19 June 2014 07:23 AM

    நமக்கு எதுக்கு இந்த வேலை......????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X