2025 மே 01, வியாழக்கிழமை

விளை நில உற்பத்திகளின் விற்பனை கண்காட்சி

Kogilavani   / 2014 ஜூன் 19 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மருத்துவமற்ற வாழ்க்கைக்கான பசுமையான உற்பத்தி என்ற தொனிப் பொருளில் விளை நில உற்பத்திகளின் விற்பனை கண்காட்சி வாகரை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை(18) இடம்பெற்றது.

வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்ற இக்கண்காட்சியில் வாகரை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் வீ.நவீரதன், வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித ஜயரத்ன, கிழக்கு மாகாண சுற்றுலத்துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரசாத், கரையோர மூலவளங்கள் திணைக்கள திட்ட இணைப்பாளர் ஏ.கோகுலதீபன், வேல்ட்;விஷன் நிறுவனத்தின் வாகரை பிரதேசத்திற்கான பொறுப்பாளர் இமேஷன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது வாகரை பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மட்பாண்ட பொருட்கள், பணையோலை பொருட்கள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள், உணவுப் பண்டங்கள் எனபன விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .