2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

காரில் சென்று பணத்தை கொள்ளையடித்த இருவர் மடக்கி பிடிப்பு

Kogilavani   / 2014 ஜூன் 19 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பட்டப்பகலில் காரில் சென்று பணத்தைக் கொள்ளையடித்த இருவரை மடக்கிப் பிடித்துள்ளதாக மட்டக்ளப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கொக்குவில் பிரதேசத்தில் புதன்கிழமை (18) பிற்பகல் நிறுவனமொன்றின் விற்பனைப் பிரதிநிதிகள் கடைகளிலிருந்து சேகரித்த ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை  வெள்ளை நிற காரில் வந்த குழுவொன்று கொள்ளையடித்துள்ளது.

குறித்த நிறுவனத்தில் லொறியை வழிமறித்தே கொள்ளையர்கள் விற்பனைப் பிரதிநிதிகளின் கைவசமிருந்த பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

உடனடியாக இந்தக் கொள்ளை குறித்து மட்டக்களப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதும் அவர்கள் குறித்த கார் பற்றிய குறிப்புக்களை சமீபமாகவுள்ள அடுத்தடுத்த பொலிஸ் நிலையங்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து மட்டக்களப்புப்  பொலிஸார்  விரைந்து செயற்பட்டு  ஏறாவூரில் குறித்த காரை மடக்கிப் பிடித்ததுடன் இருவரை கைதுசெய்தனர்.
இதன்போது, ஏறாவூர் மற்றும் பனிசசையடியைச் சேர்ந்த நபர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் காருடன் மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X