2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பொது பல சேனாவை தடை செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு மகஜர்

Menaka Mookandi   / 2014 ஜூன் 19 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பொது பல சேனா அமைப்பைத் தடை செய்யக்கோரியும் சமீபத்திய கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கக் கோரியும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா ஏறாவூர்க் கிளையினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பெரிய ஜும்மாப் பள்ளிவாசலில் இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற நண்பகல் தொழுகையின் பின்னர் நாட்டில் இனங்களுக்கிடையில் சமாதான சௌஜன்ய வாழ்வுக்காகப் பிரார்த்தனை இடம்பெற்ற பின்னர் இந்த மகஜர், ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவிடம் கையளிக்கப்பட்டது.

அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா ஏறாவூர்க் கிளையின் தலைவர் ஏ.டபிள்யூ.எம்.ஹாரிஸ் (ஹாஷிமி), உபதலைவர்களான எம்.எல். அப்துல்வாஜித், எஸ்.எம்.பரீட், செயலாளர் யூ. அப்துல்மனாப், உபசெயலாளர் எஸ்.ஏ.எம். நளீம் ஆகியோரும் பெருந்தொகையான பொதுமக்களும் இந்த பிரார்த்தனை நிகழ்விலும் ஊர்வலத்திலும் மகஜர் கையளிப்பிலும் கலந்து கொண்டனர்.

உடனடியாக இந்த மகஜரை தாங்கள்; அரசாங்க அதிபரிடம் கையளிக்க ஏற்பாடு செய்திருப்பதாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஷா ஆகியோர் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா ஏறாவூர்க் கிளையினரிடமும் பொதுமக்களிடமும் தெரிவித்தனர்.

  Comments - 0

  • ah Thursday, 19 June 2014 10:29 AM

    அதே நேரம் சில முஸ்லிம் அமைப்புகளும் தடை செய்தால் எல்லோரும் சந்தோசமா இருக்கலாம்.

    Reply : 0       0

    mounsif Friday, 20 June 2014 08:02 AM

    இது ஒரு நல்ல முடிவு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X