2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வீடமைப்புக்கு நிதியுதவி வழங்கியவர்களுக்கு வரவேற்பு

Kogilavani   / 2014 ஜூன் 20 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூர் சதாம் ஹுஸைன் கிராமத்தில் 25 வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கு நிதியுதவி வழங்கியவர்களை வரவேற்கும் நிகழ்வு  வியாழக்கிழமை மாலை (19) இடம்பெற்றது.

ஜேர்மன் கொடையாளிகளான மைக்கல் ஒயு, குவெந்தர் விற்றமன், ஜோர்க் பியலா, டொக்டர் உல்ரைக் ஸ்கொனேபெர்க் ஆகியோரடங்கிய குழுவினரே இதன்போது வரவேற்கப்பட்டனர்.

ஏறாவூர் நகர சபைத் தலைவர் அலிஸாஹிர் மௌலானா மற்றும் ஏறாவூர் சமூக அபிவிருத்திக்கும் வலுவூட்டலுக்குமான நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ்.எம். நஸீர், வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் உள்ளிட்ட  இன்னும் பல உள்ளுர்ப் பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்தக் கிராமத்தில் ஏழை மக்களுக்காக அமைக்கப்பட்ட 25  வீடுகளுக்குமான நிதியுதவிகளை இந்த ஜேர்மன் கொடையாளிகள் தாங்கள் கிறிஸ்மஸ் பண்டிகை விற்பனை மூலமும் மற்றும் தனிப்பட்ட கொடைகள் மூலமும் பெற்று வழங்கியிருந்தனர் என்று ஜேர்மன் கொடையாளிகள் குழுவில் இடம்பெற்றிரந்த மைக்கல் ஒயு தெரிவித்தார்.

ஏற்கெனவே மக்கள் அந்தப் புதிய வீடுகளில் குடிமர்ந்து விட்டபோதிலும் இந்தக் கொடையாளிகளைக் கௌரவிக்கும் முகமாக இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .