2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அளுத்கம சம்பவத்திற்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

Kogilavani   / 2014 ஜூன் 20 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


சமீபத்தில் களுத்துறை மாவட்டம் அளுத்கம மற்றும் பேருவல பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதாக ஏறாவூர் நகரசபையில் வெள்ளிக்கிழமை (20) விசேட தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கையை விசாரிப்பது என்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கெதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரிப்பதென்றும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இவ்விடயம் தொடர்பிலான விசேட கூட்டம் ஏறாவூர் நகரசபைத் தலைவர் அலிஸாஹிர் மௌலானாவின் தலைமையில் வெள்ளிக்கிழமை(20)   காலை ஏறாவூர் நகரசபையில் இடம்பெற்றது.

அதன்போது நகரசபைத் தலைவர் அலிஸாஹிர் மௌலானா இந்த இரண்டு முன்மொழிவுகளையும் முன்வைத்தார்.

அதனை ஏனைய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களான ஐ.அப்துல் பாஸித் அலி, எம்.எல்.அப்துல்லத்தீப், எல்.எல்.ரெபுபாசம், உப தவிசாளர் எம்.ஐ.எம்.தஸ்லிம் ஆகியோர் ஆதரித்தனர்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மற்றொரு உறுப்பினரான அமீன் இஸ்ஸத் ஆஸாத் இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது சபையை விட்டு வெளியேறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .