2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அரசியல்துறையில் பெண்களுக்குள்ள இடம்

Kanagaraj   / 2014 ஜூன் 21 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
, ரி.எல்.ஜவ்பர்கான்,எஸ். பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

அரசியல்துறையில் பெண்களுக்குள்ள இடம்: பெண்கள் நாடாளுமன்றத்தின் முன்மொழிவுகள் (Women’s Space in the Political Arena: Proposals from the Parliamentary Caucus) என்ற தொனிப்பொருளிலான இரண்டு நாள் வதிவிடக் கலந்துரையாடலும்  பயிற்சி நெறியும்  மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் நேற்று (20) மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமானது.

போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கலந்துரையாடலில் அமெரிக்கத் தூதர் மிச்சேல் ஜி. சிசன், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பேராசிரியர் சாவித்திரி குணசேகர, கலாநிதி தீபிகா உடுகம, கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரி. ஜயசிங்கம், போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தின் தலைவி விசாக்கா தர்மதாஸ உள்ளிட்டோரும் இன்னும் பல சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு இந்த இரண்டு நாள் வதிவிடக் கலந்துரையாடலையும்  பயிற்சி நெறியையும் ஆரம்பித்து வைத்தனர்.

நாடாளுமன்றத்தின் முன்மொழிவுகளை அமுல்படுத்தலில் உள்ள சந்தர்ப்பங்களும் சவால்களும்  (Implementing the Plan of the Parliamentary Caucus: Opportunities and challenges), தேசிய சட்ட மற்றும் கொள்கை சீர்திருத்தம், சில சிந்தனைகள் (National Law and Policy Reform: Some  Reflections), சர்வதேச மனித உரிமைகள் சட்டகத்தைப் பொருத்தமானதாக்குதல் (Harmonizing the international Human Rights Framework)

போன்ற தொனிப்பொருட்களில் இக் கலந்துரையாடலும் கருத்தரங்கும் இடம்பெறுவதற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளதாக போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தின் தலைவி விசாக்கா தர்மதாஸ தெரிவித்தார்.

இலங்கையில், அரசியல் ரீதியாக பெண்களின் பிரதிநிதிநித்துவத்தை அதிகரிக்கச்செய்ய அமெரிக்க அரசாங்கம் 2009ஆம் ஆண்டு முதல் பெருந்தொகை பணத்தை செலவிட்டு வருவதாக இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிசல் சிசன் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இலங்கையில் பெண்களின் முன்னேற்றத்திலும் அபிவிருத்தியிலும் அமெரிக்கா கரிசனை கொண்டு யூ.எஸ்.எயிட்டினூடாக பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. பால்நிலை அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பெண்களின் செயற்பாடுகள் ஊடாக இந்தத் திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன.

பெண்களின் பங்குபற்றுதலுக்கு உதவுதல், பெண்களின் தொழில்வாண்மை விருத்தி, அரசா சார்பற்ற நிறுவனங்களின் இயலளவை விருத்தி செய்தல், பால் நில அடிப்படையிலான பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுத்தல் போன்ற பல்வேறு, பெண்களோடு தொடர்பு பட்ட நிகழ்ச்சிகளில் நாம் உதவுகின்றோம்.

ஹம்பாந்தோட்டையில் வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தோடு இணைந்து பணியாற்றுகின்றோம், இது போன்று பெண்கள் தங்களது ஆற்றலை மேம்படுத்திக் கொள்வதற்காக நாடு பூராகவும் இன்னும் பல அமைப்புக்களோடும் இணைந்து நாம் பணியாற்றுகின்றோம்.

இதற்காக நாங்கள் பண உதவிகளை வழங்குகின்றோம், பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கும் நிதியுதவியளிக்கின்றோம்.

யூ.எஸ்.எயிட்டினூடாக மனைப்பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்கும் உதவியளிக்கப்படுகின்றது. கூடவே பாலியல் துஷ்பிரயோகத்தை இல்லாதொழிப்பதற்கான விழிப்புணர்வை இருபாலாருக்கும் வழங்குவதிலும் யூ.எஸ்.எயிட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு ஒட்டுமொத்தமாக பெண்கள்pன் முன்னேற்றம் கருதி அவர்களின் அறிவு திறன் இயலளவு என்பனவற்றை அதிகரிப்பதற்காக 2009 ஆம் ஆண்டிலிருந்து நாம் கூடுதலான பங்களிப்பைச் செய்து வருகின்றோம்.
 
கடந்த 2007ம் ஆண்டு தொடக்கம் இது வரைக்கும் இலங்கையில் பெண்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 5.2 பில்லியன் ரூபாய்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இன்னும் பெண்களின் அபிவிருத்தித் திட்டங்களில் எமது உதவி தொடர்ந்து இருக்கும் என்பதையும் தெரியப்படுத்துகின்றேன் என மேலும் தெரிவித்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .