2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

காங்கேயனோடை பிரதேசத்தில் பெண்களுக்கான பள்ளிவாயல்

Kanagaraj   / 2014 ஜூன் 21 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தில் பெண்களுக்கான முதலாவது பள்ளிவாயல் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் நேற்று (20) திறந்து வைக்கப்பட்டது.

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் ஐக்கிய அரபு ராஜ்யத்திலுள்ள தனவந்தர் ஒருவரின் நிதியுதவியுடன் காங்கேயனோடை மஸ்ஜிதுர் ரசூல் பள்ளிவாயலுக்கு அருகில் நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த பெண்கள் பள்ளிவாயலில் பெண்கள் ஐந்து வேளை தொழுகைகளையும் நிறைவேற்ற வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பள்ளிவாயல் திறந்து வைக்கப்பட்ட வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மௌலவி ஏ.சி.எம்.றிபாய் உட்பட முக்கியஸ்த்தர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இவ் வைபவத்தின் போது பள்ளி வளாகத்துக்குள் மர நடுகையும் இடம்பெற்றது. பெண்கள் இந்த பள்ளிவாயலில் அசர் தொழுகையையும் கூட்டாக நிறைவேற்றினர்.



































You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .